Tuesday, October 25, 2016

நாங்கள் விதி விலக்குகள்

ஆமாம் அவள் அழுது கொண்டுதான் இருப்பாள்.. இந்த முடிவுக்கு அவள் எப்பொழுதோ வந்து விட்டாள்.. கொடுக்கப் பட்ட அனைத்து சந்தர்ப்பத்திலும் உன் தவறுகள் அதிகமாகும் வரை அவள் பொருத்து இருந்தாள்... காதலுக்கும் காமத்திற்கும் உனக்கு வித்தியாசம் தெரியாத பொழுதே அவள் விழித்துக் கொண்டாள்.. யாருடைய கருவை சுமக்க வேண்டும் என்பது அவளுக்கு தெரியாதா?

பார்கோடுகள்

உன்னதமானக் காதலை திரும்பத் திரும்ப அவனுக்கு மறுத்திர்கள். வெறும் பணம் ஈட்டும் பொம்மைகள் ஆக்குனிர்கள் வீரம் அறவே கூடாது என்றிர்கள். வெறும் குறீயிடுகளும் பார்கோடுகளும் தான் அவனுக்குப் புகழ்கொடுக்கும் என்று அவனை நம்ப வைத்திற்கள். இன்று அவன் கருத்தரிப்பு மையத்தில் வரிசையில் நின்றுக் கொண்டு இருக்கிறான். அவன் அது கூட சில கணிணி திட்டங்களின் தவறு என்று எண்ணம் கொண்டு இருக்கிறான்.

Wednesday, December 18, 2013

மறுப்பு

மடியில் உட்கார்ந்திருக்கும்
கணிணி பார்க்கும்
குழந்தை
பிடிக்காத பாடல்களுக்கு பின் திரும்பி
வேண்டாம் என்று கை அசைத்தது.
அம்மா இங்கே வா வா..
வேண்டாம் என்றது.
கை வீசம்மா கை வீசு..
வேண்டாம் என்றது.
 லாலிபாப் லாலிபாப்
 வேண்டாம் என்றது.
 தத்திதோம் வித்தைகள் கற்றிடும் ...
 இரண்டு வரிகள் கடந்து இருக்கும்..
நானும் பாட ஆரம்பிதேன்....
பின் திரும்பி கை அசைத்தது
குழந்தை..
நான் பாடுவதை நிறுத்தி விட்டேன்
அது பாடல் பார்ப்பதை தொடர்ந்தது..

உரசல்அது ஒரு வசந்த காலத்தின் தொடக்கம்
இரவும் பௌர்ணமியும் ஒத்து இருந்தது
நாங்கள் இருவரும் நடந்து சென்று கொண்டு இருந்தோம்
சாலை எங்களை கடந்து சென்றது
உரசிகொள்ளாமல் பார்த்து கொண்டேன்
அம்மா, அப்பா,
நன்மை , நாகரிகம்,
ஒஷோ , மணிரத்தனம்
என்று சுற்றி வந்தது அவளது பேச்சு.
நான் அவள் பேச்சை
ரசித்து கொண்டு இருந்தது மட்டுமே
அவள் அறிவாள்.
ஆனால் பேச்சின் இடையே
அவள் முடியில் ஒன்று
அவள் கன்னத்தினை தடவிய பொழுது ,
என் காம இச்சை கிளரப்பட்டது
என்பது தெரிந்திருக்க வாய்ப்பிலை
நானும் சொல்லி கொள்ளவில்லை.

Monday, June 24, 2013

உன் பெயர்


உன் பெயரை
சொல்லி
யாரது என்று
கேட்கிறார்கள்.


என்ன சொல்வது
எதற்காக அந்த
பெயரை பற்றி
என்னிடம் கேட்கிறார்கள்?
அது மறந்து போன
மறக்கப்பட்ட பெயர்
அயிற்றே.

யார் நீ ?
என்ன செய்தாய்.
என் சாயத்தை
மாற்றியதை விட
பெரிதாக என்ன
செய்து விட்டாய்.

யார் நீ ?
இரவும் பகலும்
புணர்ந்த வேலையில்
இந்த பெயரை
தானே நீ
தாங்கி நின்றாய்.

யார் நீ ?
ஒட ஒட துரத்தும்
எண்ணங்கள் இடையில்
கிழிந்து எரித்த
சட்டைக் கணக்காய்
இருந்த பொழுது
நீ இந்த பெயருடன்
தானே என்னை
கடந்து சென்றாய்.

யார் நீ ?
சுதந்திரர்களும் அடிமைகளும்
சுவாசம் செய்யும்
புலோகத்தின் உச்சியில்
நின்று கத்திக் கொண்டு
இருந்தேனே அப்பொழுதும்
இதே பெயரை
தானே நீ
சுமந்து கொண்டு
இருந்தாய்.

யார் நீ ?
என்ன பெரிதாக
செய்யது விட்டாய்.
நிஜத்தின் வண்ணத்தினை
வெளிச்சமாக்கி காட்டியதை
விட
என்ன பெரிதாக
செய்து விட்டாய்.

உன் சுயத்தையும்
உன் பெயரையும்
மாற்றி அமைத்துகொள்.
அப்பொழுது சொல்கிறேன்
உன்னிடமே நீ
யாரென்று.....

Sunday, June 23, 2013

பயணித்தல்

சுழன்று கொண்டெ இருக்கலாம்.
கைமீறிப் போன சொத்துகளுக்காகவோ நில புலத்திற்காகவோ
 நின்று யோசனை செய்ய நேரமில்லை.
 காலை முதல் மாலை வரை
அயராமல் சுழல வேண்டும்.
அடுத்த தலை முறைக்கு
இன்றே உழைக்க வேண்டும்.
 சில செலவுகள் , ஆட்டம் பாட்டம்
அனைத்தையும் அனுமதி அளிக்கலாம்.
எந்த ஒய்வும் இந்த நாட்களில்
தேவை இல்லை. ரத்தவோட்டம்
 நிற்கும் வரை உழைக்கலாம்.
 தோல் சுருங்கும் வரை போராடலாம்.
விதைத்த விதை விருட்சமாகும்.
 இருக்கும் பொழுதோ இறந்த பின்னரோ
எதுவும் எதிர்பார்க்காமல் சுழலாம்.

Tuesday, August 28, 2012

நானும் அவர்களும்

கவிதை எழுதும் பொழுது
நான் தனித்து போகிறேன்.

கவிதையினை பறிமாறிக்
கொள்ளும் பொழுது அவர்கள்
என்னை விலக்கி வைத்து
பார்க்கிறார்கள்.

 ஏன் நான் இப்படி இருக்கிறேன்
 என்று அவர்கள்
 ஐயப்படுகிறார்கள்.

அவர்கள் வாழ்க்கையையும்
நான் ஒரு கவிதைக்குள்
அடைத்து விடுவேனோ
என்று பயப்படுகிறார்கள்.
சோகங்களை புதைக்கிறார்கள்.

நான் என்னுலகத்தில்
பயனிப்பதை அவர்களால்
பொருத்து கொள்ள
முடியவில்லை.

 நான் வெற்றிபெற்றால்
என்னை கொண்டடுவதற்கும்
தோல்வியுற்றால்
என் மீது பழி போடுவதற்கும்
அவர்கள் ஆயத்தமாய்
இருக்கிறார்கள்.

காதல் கவிதை
எழுதும் பொழுது
நான் தவறுகளுக்கு
அச்சப்பட மாட்டேன் என்றும்
மரணத்தைப் பற்றி
விவரிக்கும் பொழுது
நான் சாவை
மறக்காத பைத்தியம்
என்றும் அவர்கள் நினைத்து
கொள்கிறார்கள்.

நான் நடைமுறைவிட்டு
விலகி நிற்கும் பொழுது
நான் வாழத்தெரியாதவர் என்றும்,
அதிகமாக சிரிக்கும் பொழுது
 நான் ஏமாறப்போகிறேன்
என்றும் யோசிக்கிறார்கள்.

ஒரு தாய்மொழி கவிதை
என்பது
ஒர் ஆத்மாவை
ஒரு மயானபுமியை
ஒரு மொழியை
ஒர் உணர்வை
ஒரு ஜனனத்தை
ஒரு வலியை புனிதமாக்கும்
 என்பதை அவர்கள்
 அறியாமல் போகிறார்கள்.